ஜம்மு - காஷ்மீர் நிலவரம் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal



ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகள் தாக்குதல்  நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை ரியாசி பகுதியில் சிவகோரி கோவிலுக்கு பக்தர்களுடன் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து கத்வா மற்றும் தோடா ஆகிய இரண்டு பகுதிகளிலும் இரண்டு தினங்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். இது குறித்து அரசு தரப்பில் கூறியதாவது, "உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோருடன் பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து கலந்துரையாடினார். 

முழு விவரமும் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்திய பிரதமர் மோடி, பாதுகாப்பு படைகள் மற்றும் அவற்றின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும், மேலும் ஜம்மு காஷ்மீரின் உள்ளூர் நிர்வாகம் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் கேட்டறிந்தார் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Examined The Circumstances of Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->