இதற்கு திமுக அவமானப்பட வேண்டும் - பாமக வழக்கறிஞர் கே, பாலு பேட்டி - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சிவா 1,23,688 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று உள்ளார். மேலும் அவர் 67400 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளார். 

இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் 56,248 வாக்குகளை பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,520 வாக்குகளை பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் கே, பாலு இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "திமுக பணத்தை வாரி இறைத்தும் கூட எங்களுக்கு 56 ஆயிரம் மக்கள் வாக்களித்துள்ளனர். வாக்களித்தவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்த தேர்தலில் ஜனநாயகம் தான் தோற்றுள்ளது. பண பலத்தின் மூலம் தான் திமுக என்று வெற்றியை பெற்றுள்ளது. இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பொருத்தவரை வாக்காளர்களுக்கு திமுக பணம் கொடுத்தது, பரிசு பொருட்கள் மூலமாகவே திமுக வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் திமுகவிற்கு தோல்வி பயத்தை பாமக ஏற்படுத்தி உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுகவிற்கு தோல்வி பயத்தை ஏற்படுத்த முடிந்தது என்பது பாமகவுக்கு மன நிறைவு தான். 

அப்பாவி மக்களிடம் 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் காட்டி, அவர்களை ஏமாற்றி திமுக வாக்கை பெற்றுள்ளது. இதற்காக திமுக பெருமைப்படக்கூடாது. அவமானப்பட வேண்டும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகளும் பாமகவுக்கு கிடைத்துள்ளது" என்று பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Balu say about Vikravandi by election result


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->