கர்நாடகாவிடம் இருந்து வெறும் 8000 கன அடியை மட்டும் ஏற்றுக் கொள்ளக் கூடாது - பாமக நிறுவனர் ராமதாஸ் ..!! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் , "டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக தினமும் 1 டி. எம். சி. அதாவது 11, 500 கன அடி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்து விடவேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ளது. 

ஆனால், தமிழகத்திற்கு 8000 கன அடி தண்ணீரை மட்டுமே திறந்து விட முடியும் என்று, நேற்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணைப்படி தண்ணீர் திறந்துவிடும் அளவிற்கு கர்நாடக அணைகளில் நீர் இருப்பு இல்லை என்று கர்நாடகா தொடர்ந்து உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறி வருகிறது. 

கர்நாடகத்தில் 4 அணைகளிலும் நேற்றிரவு நிலவரப்படி 77 டி. எம். சி. நீர் இருப்பு உள்ளது. தினமும் வினாடிக்கு 3.15 டி. எம். சி. தண்ணீரை கர்நாடக அணைகள் பெற்று வரும் நிலையில், தமிழகத்திற்கு 1 டி. எம். சி. நீரைத் திறந்து விட கர்நாடக அரசு மறுப்பது கண்டனத்திற்குரியது. 

அங்குள்ள அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், இனியும் அங்கு நீரை சேமிக்க முடியாது என்பதாலேயே கர்நாடகா 8000 கன அடி நீரை திறந்து விடுகிறது. காவிரியில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமைகளை திமுக அரசு தொடர்ந்து தாரை வார்த்து வருகிறது. 

காவிரி ஆணையத்தின் அடுத்த கூட்டத்தை விரைவில் கூட்டி, தமிழகத்திற்கு வரவேண்டிய நீரை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். ஒருபோதும் இந்த 8000 கன அடி தண்ணீரை ஏற்றுக் கொள்ளக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Founder Ramadoss Says TN Should not Accept 8000 Cubic Feet Water From Karnataka


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->