பாமக தலைவர் ஜி கே மணி வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பாமக தலைவர் ஜி கே மணி சற்றுமுன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "19.2.2022 நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க வேட்பாளர்களுக்கு "மாம்பழம்" சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு வாக்காளப் பெருமக்களாகிய அன்புச் சகோதரர்கள், சகோதரிகள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

பா.ம.க வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பா.ம.க வேட்பாளர்கள் வெற்றிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் - ஜி.கே.மணி 

19.2.2022 நாளை மறுநாள் நடைபெறவுள்ள  பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றின் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் மிகவும் முக்கியாமான தேர்தல். பொதுமக்கள் அடிப்படைத் தேவைகளை, அன்றாடப் பிரச்சினைகளை உடனுக்குடன் ஓடி வந்து நிறைவேற்றக்கூடியவர்கள் வார்டு உறுப்பினர்கள். குடிநீர், தெருவிளக்கு, துப்புரவு, சாலை, சாக்கடை, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நேரில் சந்தித்து உடனே செய்து கொடுப்பவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மிக முக்கியத் தேர்தல்.              

இத்தேர்தலில் பொதுமக்களுக்காக அர்ப்பணிப்புடன், சேவை நோக்குடன், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும், எளிமையாக பழகும் பா.ம.க வேட்பாளர்களுக்கு "மாம்பழம்" சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு வாக்காளப் பெருமக்களாகிய அன்புச் சகோதரர்கள், சகோதரிகள் அனைவரையும் அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்களுக்கு சேவை நோக்குடன் பணியாற்ற தங்களை அர்ப்பணித்துக்கொண்டு தேர்தலில் வேட்பாளர்களாக களத்தில் வீடுவீடாகச் சென்று ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து, பாசத்துடன் பணிந்து, கைகூப்பி,வணங்கி வாக்கு சேகரிக்கும் பா.ம.க வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.   

பா.ம.க வேட்பாளர்களின் வெற்றிக்கு, வெற்றியே எமது இலட்சியம் என்ற உயரிய குறிக்கோளுடன், இரவு பகலாக உழைத்துக்கொண்டிருக்கும் நமது பொறுப்பாளர்கள், செயல்வீரர்கள், ஆதரவளிக்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்"

இவ்வாறு பாமக தலைவர் ஜி கே மணி தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk head g k mani announce election 2022 feb


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->