திமுக அரசைக் கண்டித்து போராட்டம்! சௌமியா அன்புமணி, பாமகவினர் கைது!
PMK Protest AU Case DMK Govt
அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தவந்த சௌமியா அன்புமணி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு கோரியும், திமுக அரசைக் கண்டித்து, சென்ணை வள்ளுவர் கோட்டத்தில் இன்று பாமக மகளிர் சங்கத்தினர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி தலைமையில், பாமக மகளிர் சங்கத்தை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சௌமியா அன்புமணி உள்ளிட்ட பாமகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதில், நீதி கேட்டு போராடுபவர்களை கைது செய்யும் திமுக அரசுக்கும், காவல் துறைக்கும் கடும் கண்டனம் தெரிவிப்பதாக பாமகவினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
PMK Protest AU Case DMK Govt