தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாய பாடமாக்க வேண்டும் - மருத்துவர் இராமதாஸ்!
PMK RAMADOSS Tamil Education Mozhi por Thiyagikal Thinam
தமிழைக் கட்டாயப் பாடமாகவும், பயிற்றுமொழியாகவும் மாற்ற நடவடிக்கை எடுப்பதுதான் தமிழன்னைக்கும், மொழிப்போர் ஈகியர்களுக்கும் செலுத்தப்படும் உண்மையான மரியாதையாக அமையும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரின் செய்தி குறிப்பில், "மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அன்னைத் தமிழுக்காக தங்களின் இன்னுயிரை ஈந்தது உள்ளிட்ட அவர்கள் செய்த ஈகங்களை போற்றி வீரவணக்கம் செலுத்துகிறேன்.
ஆனால், எந்த நோக்கத்திற்காக அவர்கள் போராடினார்களோ, அதற்கு எதிரான திசையில் ஆட்சியாளர்கள் பயணிப்பதும், அன்னைத் தமிழை அவமதிப்பதும் மொழிப்போர் ஈகியருக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
தமிழைக் கட்டாயப் பாடமாகவும், பயிற்றுமொழியாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துக் கடைகளின் பெயர்ப்பலகைகளையும் அன்னைத் தமிழ் ஆட்சி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
அதுதான் தமிழன்னைக்கும், மொழிப்போர் ஈகியர்களுக்கும் செலுத்தப்படும் உண்மையான மரியாதையாக அமையும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
PMK RAMADOSS Tamil Education Mozhi por Thiyagikal Thinam