ராமலிங்கம் கொலை வழக்கில், மேலும் இருவர் கைது! - Seithipunal
Seithipunal


2019ல் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ராமலிங்கம் கொலை வழக்கில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவுடன் தொடர்புடைய அப்துல் மஜீத் மற்றும் ஷாகுல் ஹமீது ஆகிய இரண்டு தலைமறைவு குற்றவாளிகளை தேசிய புலனாய்வு முகமை (NIA) சனிக்கிழமை கைது செய்துள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த இவர்கள் இருவரும், கொலையில் ஈடுபட்டதுடன், PFI அமைப்பின் உறுப்பினர்கள் என்பதும் NIA விசாரணையில் தெரிய வந்துள்ளது.

2019 பிப்ரவரி 5ஆம் தேதி, திருபுவனத்தில் மற்ற குற்றவாளிகளுடன் இணைந்து ராமலிங்கத்தின் கைகளை வெட்ட சதி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட பாமக தலைவராக இருந்த ராமலிங்கம், மதமாற்ற நடவடிக்கைகளை எதிர்த்ததால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

2019 மார்ச்சில் NIA இந்த வழக்கை ஏற்றது. ஆகஸ்டில் 18 குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அவர்களில் ஆறு பேர் தலைமறைவாக இருந்த நிலையில், தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது. 2021ல் ரஹ்மான் சாதிக் கைது செய்யப்பட்டார். 2024 நவம்பரில் மஜீத் மற்றும் ஹமீது திண்டுக்கல் அருகே கைது செய்யப்பட்டனர். 19வது குற்றவாளியான முகம்மது அலி ஜின்னாவும் கைது செய்யப்பட்டார்.

மஜீத் மற்றும் ஹமீது மீண்டும் தப்பிச் சென்ற நிலையில் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Ramalingam case NIA arrest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->