பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை சட்டத்தை செயல்படுத்துவதில் பாமக தீவிரம்! அடுத்தடுத்து நடைபெற்ற சந்திப்புகள்!
PMK submitted copy of Dr Anbumani MP statement to Govt officials for ban smoking in public place
பொது இடங்களில் புகைபிடிக்க தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்ற பாமக தலைவர் மருத்துவர் அன்புமணியின் அறிக்கையை தலைமைச் செயலகத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பாமக நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.
இந்தியாவில் புற்றுநோய் உள்ளிட்ட தொற்றாநோய்களால் ஆண்டுக்கு 60.46 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், புற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடந்த 23-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையின் நகல்களை ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன், சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் முனைவர் கார்த்திகேயன், மருத்துவத்துறை செயலாளர் டாக்டர் செந்தில் குமார் ஆகியோரிடம் வழங்கினார்.
தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்ட அனைத்து துறை செயலாளர்களின் அலுவலகங்களிலும் அறிக்கையின் நகல்கள் ஒப்படைக்கப்பட்டன. ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்பு தலைவர் ஈகை. தயாளன், மாவட்ட செயலாளர் முத்துக்குமார், பகுதி செயலாளர் கோபி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
English Summary
PMK submitted copy of Dr Anbumani MP statement to Govt officials for ban smoking in public place