விஜயலட்சுமி வழக்கில் சீமானுக்கு மீண்டும் சம்மன்! சென்னை போலீசார் அதிரடி!
Police decided give summon again to Seeman in Vijayalakshmi case
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சென்னை வளசரவாக்கம் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டம் உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பெயரில் ஏற்கனவே அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட நீதிபதி முன்பும் ஆஜராகி விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்திருந்தார். மேலும் சீமான் தன்னை கட்டாயப்படுத்தி 7 முறை கரு கலைப்பு செய்ததாக குற்றம் சாட்டியிருந்த விஜயலட்சுமிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அன்று அவர் ஆஜராகாததால் மீண்டும் செப்டம்பர் 12ஆம் தேதி ஆஜராக மாறு போலீசார் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் செப்டம்பர் 12ஆம் தேதியும் பல்வேறு கட்சி பணிகள் மற்றும் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பல மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராக உள்ளதால் தன்னால் இந்த வழக்கு தொடர்பாக ஆஜராக முடியவில்லை என சீமான் விளக்க கடிதம் கொடுத்திருந்தார்.
மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி சீமான் கொடுத்த 2 விளக்க கடிதங்களை சமர்ப்பித்திருந்தனர். அந்த விளக்க கடிதங்களில் விஜயலட்சுமி வழக்கை தொடர்பாக சில ஆவணங்களை வழங்குமாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செய்யுமாறு வளசரவாக்கம் காவல் நிலைய போலீசாரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் விஜயலட்சுமி வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2வது முறையாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். சென்னை நீலாங்கரை அருகே பாலவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு நேரடியாக சென்று விஜயலட்சுமி வழக்கு தொடர்பாக சம்மன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்ட சம்மனுக்கு சீமான் ஆஜராகாததால் மீண்டும் காவல்துறையினர் சமன் வழங்கி இருப்பது விஜயலட்சுமி வழக்கில் சீமானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த முறையும் சீமான் ஆஜராகாமல் தவித்தால் அவர் கைது செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Police decided give summon again to Seeman in Vijayalakshmi case