மாண்டஸ் புயலுக்கு இரையான மீனவர்களின் வீடுகள் - உடனடியாக களத்தில் இறங்கிய பாமகவினர்! - Seithipunal
Seithipunal


இன்று இரவு கரையை கடக்க உள்ள மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில்  கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. குறிப்பாக காலப்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உப்பட்ட பிள்ளை சாவடி மீனவர் கிராமத்தில், கடல் அரிப்பால் 20 வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தது.

இதுகுறித்த தகவலறிந்து வந்த பாட்டாளி மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் கணபதி, பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து வீடுகளை இழந்த மீனவர்களுக்கு ஆறுதல் கூறிய கணபதி, உடனடியாக பாதிக்கப்பட்ட  வீடுகளுக்கு முதல் கட்ட நிவாரணமாக 10 லட்சம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்தாவது, "கடல் மண்ணரிப்பை தடுப்பதற்கு நிதி ஒதுக்கியும், இதுநாள் வரை அதற்கான பணி தொடங்கப்படவில்லை.  இதனால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலை தொடரக்கூடாது அரசு மக்கள் நலனின் போதிய கவனத்தை செலுத்த வேண்டும். என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன். 

கடல் மண்ணரிப்பை தடுப்பதற்காக, இந்த பகுதியில் ஒரு தலை தலைபட்சமாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கருங்கல் கொட்டியுள்ளார்கள்.

கடற்கரை மண் அரிப்பை தடுப்பதற்கு தூண்டில் முள் வடிவத்தில் கற்களை கொட்ட வேண்டும். ஆனால், இந்த பகுதியில் மட்டும் பொடி கருங்கல்லை கொட்டி இருக்கிறார்கள்.

இது தவறான நடவடிக்கை. ஸ்டார் வடிவ கற்களை மட்டுமே இங்கு பயன்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி அரசை கேட்டுக் கொள்கிறேன்" என்று கணபதி தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் கணபதி, மாநில பாட்டாளி மீனவர் சங்க தலைவர் உத்தராடம், மாநில தொழிற்சங்க துணைத் தலைவர் துரைக்கண்ணு, காலாப்பட்டு தொகுதி தலைவர் மணிகண்டன், மாநில வன்னியர் சங்க செயலாளர் முருகன், நகர தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உடன் வந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry pmk Ganapathy visit kalapattu cyclone damage area


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->