சீமானுடன் பாஜக நெருங்க வாய்ப்பு இருக்கு.!! எச்.ராஜா சூசகம்.!!
Possibility have BJP will get closer to Seeman
பாஜக மூத்த தலைவர் எச். ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது தேர்தலில் பாஜக நாம் தமிழர் கட்சி கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் "உங்கள் மூலமாகவே சீமானுக்கு ஒரு செய்தியை சொல்கிறேன். சீமான் பேசக்கூடிய பல விஷயங்கள் அவருக்கு முன்னர் நான் பேசியுள்ளேன். அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும் பொழுது அதில் நான் பங்கேற்று உள்ளேன்.
அவர் பாஜகவை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் ஒரு விஷயத்தை கைவிட்டு விட்டால் நாங்கள் நெருங்கி வரலாம். தமிழ் தேசியம் என்பது பிரிவினைவாதம். இந்திய தேசியம் தான் இருக்கு. மற்றபடி அவர் திராவிடம் என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளவில்லையோ, அது போன்று நானும் ஏற்றுக் கொள்ளவில்லை.
சீமான் எனக்கு ஒரு நல்ல நண்பர். இந்த பிரிவினை வாதத்தை அவர் கைவிட வேண்டும். நான் தனியாக இருந்தால் எதுவும் செய்ய முடியாது. அதனால் அவர் கொஞ்சம் பகுத்தறிவோடு சிந்தித்து அவருடைய நிலைப்பாட்டில் மாற்றம் வருகிறதா என்று பார்ப்போம். வந்ததும் அடுத்தது பேசலாம்" என தெரிவித்துள்ளார்.
English Summary
Possibility have BJP will get closer to Seeman