பிரியங்கா காந்தி எங்கள் பலம்! வயநாட்டில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவார் - சசி தரூர்!!
Priyanka Gandhi will contest in Wayanad and win for sure Shashi Tharoor
பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவார் என்று உறுதியாக நம்புகிறேன் என சசி தரூர் கூறியுள்ளார்.
நடைபெற்று முடிந்த 18 வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் நேற்று ராகுல் காந்தி வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில், நடைபெற உள்ள வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்முறையாக பிரியங்கா காந்தி தேர்தலில் களம் இறங்க உள்ளார். இதனால்வரை உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த பிரியங்கா காந்தி. பொதுக்கூட்டங்களில் நாட்டின் பிரச்சனைகளை குறித்து தனது துணிகரமான பேச்சுகளால் பாஜகவின் செயல்களை சரமாக கேள்வி எழுப்பி பல்வேறு சர்ச்சைகள் சிக்கியும் உள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி யுமான சசி தரூர் பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரவேசம் குறித்து கூறியுள்ளதாவது, பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நாடாளுமன்றத்தில் ஒரு சக்தி வாய்ந்த குரலாக பிரியங்கா காந்தி இருப்பார். அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது எப்படி செயல்பட்டார் என்று நாம் அனைவரும் பார்த்திருப்போம். பிரியங்கா ஒரு சிறந்த பேச்சாளர். பாராளுமன்றத்தில் எங்களுடன் அவர் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
English Summary
Priyanka Gandhi will contest in Wayanad and win for sure Shashi Tharoor