புதுக்கோட்டை: பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து - 21 மாணவர்கள் காயம்! அண்ணாமலை ஆறுதல்!
Pudukottai School Buss Accident
புதுக்கோட்டை மாவட்டம் முத்துடையான்பட்டி அருகே, திருச்சி – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதி பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 21 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியர் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவர்களின் நிலையை பார்வையிட்டு, ஆறுதல் கூறினார்.
பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பள்ளி மாணவர்கள் பேல்ட் அணியாத நிலையில் இருந்ததால் சிலருக்கு காயங்கள் அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தகவல்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட தகவலின்படி:
✔ அதிக வேகத்தில் வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளி பேருந்து மீது மோதியதாக கூறப்படுகிறது.
✔ மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
✔ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜக மாநில தலைவரை அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
"புதுக்கோட்டை அருகே, பள்ளி வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 15க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. குழந்தைகள் அனைவரும் விரைந்து நலம்பெற, இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்"
English Summary
Pudukottai School Buss Accident