மனைவியுடன் சேர்ந்து.. பிரதமரை சந்தித்த புஜாரா.! இது தான் காரணமா.?!
Pujara and wife met with pm Modi
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான புஜாரா, பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
இந்தியனின் பிரபல கிரிக்கெட் வீரராக இருப்பவர்தான் புஜாரா. இவர் நாளை மறுநாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடக்க உள்ள டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடுகின்றார். இது அவரது 100-வது டெஸ்ட் போட்டியாகும்.
எனவே, தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பாக அவர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துக்களையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுள்ளார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்த சந்திப்பின் போது புஜாராவின் மனைவியும் உடன் இருந்தார்.
புஜராவும் அவருடைய மனைவியும் பிரதமர் மோடியை சந்தித்துக் கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். அத்துடன் புஜாராவும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
English Summary
Pujara and wife met with pm Modi