பஞ்சாப் கருத்து கணிப்பு பொய்யா? ஆம் ஆத்மீ தான் இதற்க்கு காரணமா? வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


ஏழு கட்டங்களாக நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி, பஞ்சாப் சட்டமன்ற பொதுத் தேர்தல் குறித்து வெளியான கருத்துக் கணிப்புகளின் படி, ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக நடத்தப்படும் கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று, சிரோமணி அகாலி தளத் தலைவர் போர்க்கொடி தூக்கி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கருத்துக்கணிப்புகளை பஞ்சாப் மாநில மக்கள் எப்போதும் நம்ப மாட்டார்கள். இந்த தேர்தலுக்கு முன்பாக நடத்தக் கூடிய இந்த கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும்.

இந்த கருத்துக் கணிப்புகளில் எந்த ஒரு வாக்காளரும் சம்பந்தப்படுவதே இல்லை. தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இப்போதெல்லாம் சில அரசாங்கங்கள் பொதுப் பணத்தை பயன்படுத்தி கருத்துக் கணிப்புகள் நடத்தி வருகின்றன. குறிப்பாக ஆம் ஆத்மி இதை செய்து உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

punjab election results and exit poll


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->