'நீட்' தேர்வுக்கு பலியான அனிதாவின் குடும்பத்தை சந்தித்த ராகுல் காந்தி.!
Rahul Ganthi meet Meet suicidal girl anitha Family
அகஸ்தீஸ்வரத்தில் இரண்டாவது நாளாக தனது நடை பயணத்தை துவங்கிய ராகுல் காந்தி நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.
காங்கிரஸின் முக்கிய தலைவராக இருக்கும் ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அகில இந்திய அளவில் தொண்டர்களை உற்சாகம் அடைய வைக்க பாரத் ஜோடா யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை துவங்கியுள்ளார். கன்னியாகுமரியின் காந்தி மண்டபத்தின் வழியாக நடைபயணத்தை மு க ஸ்டாலின் நேற்று கொடி அசைந்து துவங்கி வைத்தார்.
இந்த நடைபயணமானது கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி வழியே காஷ்மீர் சென்றடையவுள்ளது. மொத்தம் 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்களில் 3500 கிலோ மீட்டர் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
காந்தி நினைவு மண்டபம் முன்பாக துவங்கிய இந்த ஒற்றுமை பயணம் 600 மீட்டர் தொலைவில் இருக்கும் கடற்கரை சாலையில் பொதுக்கூட்ட மேடையில் நேற்று நிறைவடைந்தது. பின்னர், அகஸ்தீஸ்வரத்தில் இருக்கும் விவேகானந்தா கல்லூரி மைதானத்திற்கு சென்ற ராகுல் காந்தி ஒரு கேரவனில் ஓய்வெடுத்தார். இரண்டாவது நாளான இன்று அகஸ்தீஸ்வரத்தில் இருந்து ராகுல் காந்தி நடைபயணத்தை துவங்கியுள்ளார்.
இத்தகைய சூழலில், அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்துள்ளார். அவர்களை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ராகுல் காந்திக்கு அறிமுகம் செய்து வைத்த நிலையில் ராகுல் காந்தியுடன் சேர்ந்து பாதயாத்திரையில் அனிதாவின் குடும்பத்தினர் பங்கேற்றுள்ளனர்.
English Summary
Rahul Ganthi meet Meet suicidal girl anitha Family