தர்மபுரியில் மூன்று முக்கிய புள்ளிகளின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை.! - Seithipunal
Seithipunal


தர்மபுரியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 3 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

தர்மபுரி, ஏமகுட்டியூர் ராம் நகர் பகுதியில் வசித்து வரும் முத்து என்பாரின் வீட்டிலும், ஜெயராமன் வீட்டிலும், கள்ளக்குறிச்சியில் கல்வி இயக்குனரகத்தில் பணியாற்றிவரும் ஜெயராமன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளியான தகவலின் படி, கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெறலாம், அல்லது அரசியல் கட்சிகளுக்கு பினாமியாக செயல்பட்டதற்காக இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறலாம் என்று சொல்லப்படுகிறது.

அதே சமயத்தில், நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பினாமிகளாக செயல்பட்டு, இவர்கள் பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுவதற்கான காரணம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், இன்று காலை எட்டு முப்பது மணி முதல் இவர்கள் மூன்று பேரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RAID IN DHARMAPURI 3 PLACE


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->