பாஜக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல்.! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் போட்டியிடும் மாநிலங்கள் எது தெரியுமா?!
Rajya Sabha Election 2022
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம், வரும் ஜூன் மாதம் 21-ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் வெவ்வேறு நாட்களில் முடிவடைகிறது. இதில் தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்களும் நிறைவடைகிறது.
இந்த 57 இடங்களுக்கும் வரும் ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்பு மனுக்களைத் தாக்கல் கடந்த மே 24ஆம் தேதி முதல்., தொடங்கியுள்ளது. மே 31ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேட்புமனு பரிசீலனை ஜூன் 1, வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் ஜூன் 3 ஆம் தேதி. ஜூன் 10ஆம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். அதே நாள் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார்.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார்.
மேலும் விவரங்களுக்கு..,
English Summary
Rajya Sabha Election 2022