#சென்னை || வாக்குச்சாவடி மைய்யத்தில் அதிமுக பிரமுகருக்கு கத்திக்குத்து.! முன்னாள் அமைச்சர் சாலை மறியல் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


அதிமுக பிரமுகர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராயபுரம் பகுதி நாற்பத்தி ஒன்பதாவது வார்டு பகுதியில், இன்று மாலை தேர்தல் வாக்குப்பதிவு நிலவரத்தை பார்க்க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்துள்ளார். அப்போது 49வது பகுதியில் பகுதியை சேர்ந்த திமுகவினர் வாக்கு சாவடி மையத்துக்குள் இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் நேரடியாக கேட்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அங்கு கூடிய அதிமுகவினர் உள்ளே சென்று இருக்கிறார்கள். ஆனால் அவர்களை உள்ளே செல்வதற்கு அனுமதிக்காமல் காவல்துறையினர் தடுத்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் சிலரை திமுகவினர் ஏற்கனவே தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தில் கைகலப்பு ஏற்பட்டு அதிமுகவை சேர்ந்த நிர்வாகி பிஸ்வந்த்க்கு கத்திக்குத்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்த அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  

இந்த சூழ்நிலையில், 49வது பகுதியில் ஆறுமுகம் நாடார் பள்ளி பகுதியில் தற்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rayapuram admk member attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->