இலவச வீட்டுமனை பட்டா..மாவட்ட ஆட்சியர் தலைமையில் கணக்கெடுப்பு பணி!
Free house site patta District Collector leads survey work
கும்மிடிப்பூண்டி நகர் பகுதியில் ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்தவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு நகர் பகுதியில் வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வருபவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை புறநகர் சுற்றியுள்ள பகுதியில் வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வருபவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான அரசாணை வெளியிட்டார்.
அதனடிப்படையில் கும்மிடிப்பூண்டி ஊராட்சி மற்றும் பேரூராட்சி சுற்றியுள்ள பகுதிகளில் (Belt Area) வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வரும் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட மேல்முதலம்பேடு,அனுப்பநாயக்கன் குப்பம், கரும்பு குப்பம், வசந்தாபஜார் 2 – வது தெரு , ஆகிய பகுதிகளில் வருவாய்த்துறை அலுவலர்களால் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதை. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, ஆரணி பேரூராட்சி பகுதி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சிகுட்பட்ட பெத்திகுப்பம் பகுதியில் புதிய பேருந்து நிலையத்திற்கான இடம் தேர்வு குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
இதில் பேரூராட்சி செயற்பொறியாளர் சரவணன், வட்டாட்சியர்கள் சோமசுந்தரம் (பொன்னேரி), சுரேஷ்குமார் (கும்மிடிப்பூண்டி) பேரூராட்சி செயல் அலுவலர்கள் அபுபக்கர் (ஆரணி), பாஸ்கர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Free house site patta District Collector leads survey work