திமுக அரசின் நல்லாட்சியை சிலர் வேண்டுமென்றே குறை கூறுகிறார்கள் - சபாநாயகர் அப்பாவு.!
Sabanayagar appavu speech in Gramsabha meeting
திமுக அரசின் நல்லாட்சியை சிலர் வேண்டுமென்றே குறை கூறும் விதத்தில் செயல்பட்டு வருவதாக சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர் இன்று நமது நாட்டின் மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவரை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் நாம் காந்தியை கொன்றவர்களை மதிக்கக்கூடாது. அதேபோல், காந்தியை கொன்றவர்களை மதிப்பதும் சரியானது அல்ல.
மேலும், திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்துவங்கியுள்ளது. திமுக அரசின் நல்லாட்சியை குறை கூறும் விதத்தில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். அரசின் நல்ல திட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் அமைச்சர்களின் பேச்சு வழக்கில் பேசுவதை கூட பெரும் சர்ச்சையாக்குகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
English Summary
Sabanayagar appavu speech in Gramsabha meeting