ராகுல்காந்தியின் பாதயாத்திரை.. எத்தகைய விளைவை ஏற்படுத்தும்.?- சரத்பவார் சூளுரை.! - Seithipunal
Seithipunal


மும்பை சோலாப்பூர் பகுதியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, "காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேற்கொள்கின்ற பாதயாத்திரை வருகின்ற நாட்களில் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய நன்மையை கொடுக்கும். இதுபோல முன்னாள் பிரதமரான சந்திரசேகர் பாதயாத்திரை நடத்திய பொழுது அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நான் 1980ல் ஜல்கா-வில் இருந்து நாகபூருக்கு விவசாயிகளின் உரிமைக்காக பாதயாத்திரை மேற்கொண்டேன்.

நான் ஜால்காவில் பாதயாத்திரியை துவங்கிய பொழுது என்னுடன் ஐயாயிரம் பேர்தான் வந்தனர். ஆனால் புல்தானா பகுதிக்கு சென்ற பொழுது என்னுடன் வருபவர்களின் எண்ணிக்கை 50,000 ஆக உயர்ந்தது.

அதன் பின் அகோலா மற்றும் அமராவதியில் பாதயாத்திரை மேற்கொண்ட பொழுது ஒரு லட்சம் பேர் என்னுடன் வந்தனர். இது மாநிலம் முழுவதிலும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மிகப் பெரிய காரணமாக அமைந்தது. மிகுந்த முயற்சியுடன் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் பட்சத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்." என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sarath bavar about ragul ganthi yatra results


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->