#BREAKING : அதிமுக வேட்பாளர் தோல்வி.. கணவர் விஷம் குடித்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மனைவி தோல்வி அடைந்ததையடுத்து கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள், மற்றும் முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர்ப்புர உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுகுணா தோல்வியடைந்ததை அடுத்து அவரது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனைவி தோல்வியடைந்ததை அடுத்து கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sathur ADMK candidate wife defeat husband suicide


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->