முதலமைச்சர் மீது வழக்கு தொடரும் சீமான்? - Seithipunal
Seithipunal


திருவாரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. வலிமையான கடற்படையை வைத்துள்ள மத்திய அரசு, தமிழக மீனவர்களை காக்க மறுப்பது அவர்களது வாழ்க்கை மற்றும் உயிரைப் பற்றி கவலை இல்லை என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் மு.கஸ்டாலின் அமெரிக்க பயணம் சென்று பத்தாயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக முதலமைச்சரும் டி.ஆர்.பி.ராஜாவும் கூறி வருகின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்று வழக்கு தொடருவேன் என்று கூறினார்.  வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேள்விக்கு,   நான் உங்களிடம் மாட்டிக் கொள்வதால் என்னிடமே இந்த கேள்வியை கேட்கின்றீர்கள்.

விஜய் மாநாடு போட்டு கட்சியை அறிவிக்கும்போது, அவரிடம் இந்தக் கேள்வியை கேளுங்கள். என்னை விமர்சனம் செய்து கொண்டிருந்தவர்கள் தற்போது விஜய்யை விமர்சனம் செய்கின்றனர் என்றும், எனக்கு விமர்சனங்கள் அலுத்துவிட்டது என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seaman will sue the Chief Minister


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->