என்ன... காந்தி இறந்துவிட்டாரா?" - கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக மீது சீமான் தாக்கு.!!
Seeman criticized BJP in katchatheevu issue
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மக்களவைப் பொதுத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிடம் அக்கட்சியின் வேட்பாளர் ஆதரித்து நேற்று இரவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய சீமான் கச்சதீவு விவகாரம் குறித்து தற்போது பாஜக பேசுவது தேர்தல் அரசியலுக்கான நாடகம் என விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து பேசிய சீமான் "என்ன காந்தி இறந்துவிட்டாரா? என்பது போல பாஜக தற்போது கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வருகிறது. பத்து ஆணடு காலம் ஆட்சியில் இருந்த பாஜக இப்போது பேசுவது முழுக்க முழுக்க தேர்தல் அரசியலுக்கான நாடகம்.
அனைத்துக் கட்சிகளிலும் நான் ஸ்லீப்பர் செல் வைத்துள்ளேன். என் மண் என் மக்கள் என் தமிழ்நாடு என அண்ணாமலை பேசி வருகிறார். அவரும் என்னுடைய ஸ்லீப்பர்செல் தான். நாம் தமிழர் கட்சியின் பி டீம் தான்" பாஜக என விமர்சனம் செய்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
English Summary
Seeman criticized BJP in katchatheevu issue