எங்களுக்கு தான் இரட்டை இலை.. அடித்து சொல்லும் செல்லூர் ராஜு..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய மகன் தமிழ்மணி நினைவாக தனியார் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது "தமிழக மக்கள் எடப்பாடி பழனிச்சாமி தரப்பையே அதிமுக என நினைக்கின்றனர். மக்கள் தான் எஜமானர்கள், மக்கள் தான் தலைவர்கள், மக்கள் பார்த்து யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.

திமுகவின் பொறுப்பு மிக்க தலைவராக இருக்கும் டி.ஆர் பாலு வன்முறையை கையில் எடுக்கும் வகையில் பேசுவது முறையல்ல. டி.ஆர் பாலு குறிப்பிட்டது போல் ஆசிரியர் வீரமணிக்கு எதுவும் நடக்கவில்லை. அவருடைய பேச்சு கண்டிக்கத்தக்கது. டி.ஆர் பாலுவின் பேச்சு திமுக எவ்வளவு வன்முறை எண்ணம் நிறைந்த கட்சி என்பதையே காட்டுகிறது.

மன்னர், மன்னரின் மகன், இளையராஜா, அடுத்து கொள்ளு ராஜா என தற்பொழுது கொள்ளு ராஜாவாக இன்பநிதி உள்ளார். அப்பாவுக்கு துணையாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு தற்பொழுது மூத்த அமைச்சர்கள் அனைவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு கப்பம் கட்டுவது போல் கட்டிக் கொண்டுள்ளனர்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் இரட்டை இலை சின்னம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு "சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் காரணமாக நிச்சயம் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும். அதேபோன்று சின்னம் கிடைக்காததால் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று சொல்வது தவறானது" என செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sellur Raju sais that Double leaf symbol for us


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->