அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி! முடிவு எடுத்த எடப்பாடி பழனிச்சாமி? முன்னாள் அமைச்சர் கொடுத்த அப்டேட்!
Sellur raju say about ADMK BJP Alliance
அ.தி.மு.க. பா.ஜ.க.-வுடன் கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,தொடர்ந்து கூறி வந்த நிலையில், அண்மையில் நடந்த நிருபர்கள் சந்திப்பில், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு, கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என சற்று இறங்கி பதிலளித்து இருந்தார்.
இந்த திடீர் மாற்றம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்த, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இதுகுறித்து தற்போது பதிலளித்துள்ளார்:
அதில், "எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் காலத்தில் கூட்டணி தொடர்பாக முடிவு செய்யலாம் என்று கூறியிருக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. புரட்சித்தலைவி அம்மா உருவாக்கிய அ.தி.மு.க.-வின் பிரதான எதிரி தி.மு.க. தான். அதைக் கட்டுப்படுத்துவதே எங்கள் முக்கிய இலக்கு.
காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி முறிந்தபோது, கருணாநிதி இனிமேல் அவர்களுடன் இணைய மாட்டோம், அப்படி செய்தால் அது தற்கொலைக்கு சமம் என்று கூறினார். ஆனால் பின்னர், அதையே மீறி கூட்டணி அமைத்தார். தி.மு.க. உடைத்தால் மண்குடம், நாங்கள் உடைத்தால் பொன் குடமா?
"எடப்பாடியார் எந்த உறுதியான முடிவையும் எடுத்துவிடவில்லை. தேர்தல் நேரத்தில் சூழ்நிலைப் பொறுத்து கூட்டணி அமையலாம்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Sellur raju say about ADMK BJP Alliance