ED-க்கு எதிரான வழக்கு - செந்தில் பாலாஜிக்கு திக் திக்.. பரபரக்கும் நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க கோரியும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கு கடந்த மே 6ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அந்த பதில் மனுவில் தற்போது வரை செந்தில் பாலாஜி எம்எல்ஏ பொறுப்பில் இருந்து அதிகாரம் செலுத்தும் நபராக இருந்து வருகிறார். இதனால் அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போது தாமதமாக பதில் மனு தாக்கல் செய்த அமலாக்கத்துறையை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம் இன்று (மே 15 ஆம் தேதி) விசாரிக்கப்படும் என வழக்கை ஒத்தி வைத்தது. அப்போது அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு அமலா குத்தரை வேண்டும் என்று வழக்கை இழுத்தடிப்பதாக குற்றம் சாட்டியது. அதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இன்று நிச்சயம் வழக்கு விசாரிக்கப்படும் என உறுதி அளத்தது. 

உச்ச நீதிமன்றம் உறுதி அளித்தபடி செந்தில் பாலாஜியின வழக்கின் விசாரணை இன்று நடைபெறும். செந்தில் பாலாஜியின் வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபாய் எஸ் ஓஹா மற்றும் உஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று செந்தில் பாலாஜிக்கு தித் திக் நாளாகவே அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji case against Ed hearing today in SC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->