செந்தில்பாலாஜிக்கு ஜாமின் - கிழித்தெடுத்த சீமான், பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று உச்ச நீதிமன்றம் பிணை வழங்கி உள்ளது.

செந்தில் பாலாஜி பிணையில் வெளியே வருவதை திமுகவினர் கொண்டாடி மகிழுந்து வருகின்றனர். முதலமைச்சர் முக ஸ்டாலின் கூட, உங்கள் தியாகத்திற்கும், உறுதிக்கும் பாராட்டு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், சென்னை வளசரவாக்கம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து தெரிவிக்கையில், "திருடுவது, கமிஷன் வாங்குவது, லஞ்சம் பெறுவது, டாஸ்மார்க் மதுபானங்களை கூடுதலாக விலை வைத்து விற்பது, நேரம் கடந்து விற்பனை செய்வது, கள்ளச் சரக்கு ஓட்டுவது இதெல்லாம் தியாகத்தில் வருகிறது.

இதற்குப் பேர் எல்லாம் தியாகம் என்றால், செக்கிழுத்து சிறைக்கு சென்றவர்கள், சுதந்திரத்துக்காக உயிர் நீத்தவர்கள் செய்ததற்கு பெயர் என்ன? 

இந்த நாட்டில் மண்ணை அள்ளி விற்பது, மலையை குடைந்து விற்பது, சாராயம் காய்ச்சுவது விற்பது எல்லாம் தியாகத்தில், வீர தீர செயல், பெருமைமிக்க செயலாக வருகிறது.

 

செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது யார்? திமுக உள்ளே வைத்தது யார்? அதிமுக ஆட்சி காலத்தில் நீங்கள் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர்ந்தீர்கள், அந்த வழக்கில் தான் அவர் உள்ளே போய்விட்டு வந்திருக்கிறார். செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்பியது நீங்கள் தான். இப்போது அவரை வருக வருக என்று தீர செயல் வீர செயல்கள் என்று வரவேற்கிறீர்கள்.

உங்கள் கட்சியில் இருந்தால் வீர தீர தியாகம் ஆகிவிடும். அடுத்த கட்சியில் இருந்தால் அது ஊழல் குற்றச்சாட்டு ஆகிவிடும்.

இதே முதல்வர் ஸ்டாலின் கரூரில் பேசியது இருக்கிறது. செந்தில் பாலாஜி கெட்ட கேட்டுக்கு முதலமைச்சர் வேட்பாளர் பட்டியலில் இருக்கிறார். இந்த செந்தில் பாலாஜி செய்த ஊழல் தெரியுமா? ஸ்டாலின் பேசியது பேசிய காணொளி வேண்டுமென்றால் உங்களுக்கு அனுப்புகிறேன்.

உங்களுக்காக தான் நாங்கள் காத்திருந்தோம். அங்கு செய்த திருட்டை இங்கு வந்து திருடுங்கள். ஏனென்றால் நல்ல திருடன்.

அதில் பாருங்கள் அவர் அமைச்சராவதில் எந்த தடையும் இல்லை. ஏன் என்றால் அமைச்சர் ஆக்குவார்கள். அவர்களுக்கு அவர் நல்ல அமைச்சர்" என்று சீமான் தெரிவித்தார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shriman say about Senthil Balaji bail DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->