ஊரெல்லாம் சாராயக்கடை.. ஸ்டாலினுக்கு உறுத்தவில்லையா..? ஷியாம் கிருஷ்ணசாமி வேதனை..!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சின்னராஜாகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பிரபு. இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு பிரகாஷ் (17) என்ற மகனும், விஷ்ணுபிரியா (16) என்ற மகளும் உள்ள நிலையில் பிரபு குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.

எப்பொழுதும் வீட்டில் சண்டையும், சச்சரவாக இருந்ததால் மனவேதனை அடைந்த விஷ்ணு பிரியா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த கற்பகம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக விஷ்ணு பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் விஷ்ணு பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், விஷ்ணுபிரியா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில் ''என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்தவும். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும்"  என உருக்கமாக எழுதியிருந்தார்.

இந்த செய்தியை மேற்கோள் காட்டி ஷியாம் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் "அனிதா வயதுடைய மாணவி தான் விஷ்னுபிரியாவும்… ஊரெல்லாம் சாராய கடையையும், பார்களையும் திரந்துவைத்து அவள் அப்பாவை மதுவிற்கு அடிமையாக்காமல் இருந்திருந்தால் டாக்டராக கூட ஆகியிருப்பாள். ஸ்டாலினுக்கு உறுத்தவில்லையா?" என மனவேதனையுடன் காட்டுமாக பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shyam Krishnaswamy criticized MKStalin severely


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->