ஊழல் பெருச்சாளி அமைச்சரவையில் தொடர்வது தமிழகத்திற்கு அசிங்கம்.. ஷியாம் கிருஷ்ணசாமி ட்விட்..!!
Shyam Krishnaswamy said corrupt people in cabinet is shameful for Tamilnadu
தமிழ்நாடு அமைச்சரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்த நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் தற்பொழுது இருந்து வருகிறார். அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தபோது ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அவர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் வகித்து வந்த மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆகிய துறைகளில் மின்சார துறை நீதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முனுசாமிக்கும் கூடுதலாக வழங்கிய தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அனுப்பி இருந்தார்.
இது தொடர்பாக அனுப்பிய கடிதத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை குறைவு காரணமாக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது ஏற்க மறுத்த ஆளுநர் பரிந்துரை கடிதத்தை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
இந்த நிலையில் தமிழக ஆளுநருக்கு மீண்டும் விளக்கம் அளித்து அரசு சார்பில் பரிந்துரைக் கடிதம் இன்று மீண்டும் அனுப்பப்பட்ட நிலையில் அந்த கடிதத்தை ஏற்க மறுத்துள்ள ஆளுநர் செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அமைச்சராக தொடர முடியாது என விளக்கம் அளித்துள்ளார்.
இதனால் தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே அதிகாரம் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சருக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தை பயன்படுத்தி நேரடியாக அரசாணை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தமிழ்நாடு அமைச்சரவையில் இடம் பெறுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.
இதனை புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "வாங்கிய லஞ்சத்தை திருப்பி கொடுத்ததாக நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். விசாரணை கைதி சில நாட்களில் தண்டனை கைதியாகிவிடுவார். இப்படிபட்ட ஒரு ஊழல் பெருச்சாளி தமிழக அமைச்சரவையில் தொடர்வது திமுகவிற்கு ஏற்புடையதாக இருக்கலாம், ஆனால் தமிழகத்திற்கு அசிங்கம்!" என விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Shyam Krishnaswamy said corrupt people in cabinet is shameful for Tamilnadu