காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கபடும் - ராகுல் காந்தி!!
Since Congress came to power women will be given Rs 1 lakh per year Rahul Gandhi
மக்களவை தேர்தலுக்கான மூன்றாம்கட்ட வாக்குபதிவு இன்று காலை 7 மணிக்கு தொடக்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக அணைத்து கட்சி தலைவர்களும் நான்காம்கட்ட தேர்தலுக்கு தயாராகிவிட்டனர். அந்தவகையில், சாய்பாஸா பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.
பிரச்சாரத்தில் ராகுல்காந்தி பேசுகையில், பழங்குடியினர்,ஏழைகள்,இதர பிற்படுத்தபட்ட மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேர்தல். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசிலமைப்பை அழித்துவிடும். நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் பணக்காரகர்களுக்கே வழங்கிவிட வேண்டும் என்று மோடி நினைக்கிறார்.
இந்தியா கூட்டணி வாக்களித்த்து மத்தியில் ஆட்சி அதிகாரத்திறகு கொண்டுவந்தால் கோடிக்கணக்கான ஏழை மக்களை பணக்காரர்களாக மாற்றுவோம். ஏழை குடும்பத்து பெண்களுக்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்குவோம் என்று பேசினார்.
English Summary
Since Congress came to power women will be given Rs 1 lakh per year Rahul Gandhi