நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : சிவகங்கையில் அதிமுக வேட்பாளர் வெற்றி.!
Sivakangai ADMK Candidate victory in urban local election
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சி 8வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சி 8வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தெய்வாணை வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாத நிலையில் போட்டி இன்று தேர்வாகியுள்ளார்.
English Summary
Sivakangai ADMK Candidate victory in urban local election