அதிரடி பதிலடி!!! சட்ட ஒழுங்கு நிலவரம் இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் ஸ்டாலின் கொடுத்த பதிலடி என்ன?
Stalin response Assembly EPS allegation about the law and order situation
தி.மு.க.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி:
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று (மார்ச் 20) தமிழக சட்டப்பேரவையில், நேரமில்லா நேரத்தில் தமிழகத்தில் நிகழும் கொலை சம்பவங்கள் குறித்து பேச அனுமதி கோரினார். நேற்று சேலத்தில் ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக் காட்டி அவர் பேசினார். “அன்றாட நிகழ்வுகள் போல் தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் நடந்து வருகிறது.” எனத் தெரிவித்தார். ஆனால், அவர் தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்:
அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துப் பேசினார். முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,"எனது தலைமையில் காவல்துறை குற்றச் சம்பவங்களைக் கையாள்வதிலும், தடுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குற்றச் சம்பவங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க ஆட்சிக் காலத்தை ஒப்பிடுகையில் தி.மு.க ஆட்சியில் பழிக்குப்பழி நடைபெறும் கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளன. ஆனாலும், தி.மு.க ஆட்சியில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது போல் தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது.
எந்தக் கட்சியினர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. குற்றப் பின்னணி உடையோரை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை சிறப்பாக மேற்கொள்கிறது.” எனத் தெரிவித்தார்.இது தற்போது இரு கட்சியினரிடமும் பூகம்பமாக வெடிக்க தொடங்கியுள்ளது.
English Summary
Stalin response Assembly EPS allegation about the law and order situation