தமிழ்நாட்டுக்கு நிதி தரலானாலும், தமிழக அரசு எந்த திட்டத்தையும் நிறுத்தாது; அன்பில் மகேஷ் உறுதி..!
Tamil Nadu government will not stop any project Anbil Mahesh is confident
பொதுத்தேர்வை கண்டு மாணவர்கள் அஞ்சக் கூடாது. தைரியமாக தேர்வை அணுக வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு நிதி தரவில்லை என்றாலும் தமிழக அரசு எந்த திட்டத்தையும் நிறுத்தாது. தமிழக அரசின் நிதியை பயன்படுத்தி தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும். மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொதுத்தேர்வை கண்டு மாணவர்கள் அஞ்சக் கூடாது. தைரியமாக தேர்வை அணுக வேண்டும். பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் மாணவர்களின் பதட்டத்தை குறைக்க ஆலோசனை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த ஓராண்டில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு சம்பந்தமாக 84 புகார்கள் பெறப்பட்டுள்ளது. 90 நாட்கள் கையெழுத்து இயக்கம் நடத்தும் பாஜகவினர் உறுதியாக வருத்தப்படுவார்கள். தமிழக மக்கள் இருமொழிக் கொள்கையையே விரும்புவார்கள் என்று செய்தியாளர்களிடம் அன்பில் மகேஷ் மேலும் கூறியுள்ளார்.
English Summary
Tamil Nadu government will not stop any project Anbil Mahesh is confident