தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் நிறைவு.. வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்குகிறது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை வாசித்தார். 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழகத்தில் இரண்டாவது முறையாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து முடித்தார்.

வேளாண் பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களை பற்றி பார்ப்போம். அதன்படி, தமிழ் இலக்கியங்களில் வேளாண்மை, நீர் மேலாண்மை குறித்து இடம்பெற்றுள்ளன. விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற நிலைபாட்டோடு அறிமுகப்படுத்தப்பட்டது தான் வேளாண் பட்ஜெட்.  

உழவு தொழில் உன்னதம் நிறைந்தது என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் வேளாண் பட்ஜெட் தாக்கல். கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 86 அறிவிப்புகளில், 80 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக ரூ.154 கோடி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண சிறப்பு குழு அமைக்கப்படும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

60,000 தமிழக விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நெல்லுக்கு பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட மாற்று பயிர்களை சாகுபடி செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். பயிறு வகை விதைகளை மானியத்தில் வழங்க 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த ரூ. 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். ரூ. 12 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு உயர் ரக மரங்கள் வழங்கி மரம் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படும். மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்த 3 மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவுக்கு ரூ. 5,157 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்த ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். ரூ. 28.50 கோடியில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்கப்படும். ரூ. 27 கோடியில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த தொகுப்பு வழங்கும் திட்டம் செய்யப்படுத்தப்படும்.

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்குகிறது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது முறையாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 1 மணி 55 நிமிடங்கள் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வாசித்துள்ளார்.

அதன்படி, கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். ரூ. 28.50 கோடியில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்கப்படும். ரூ. 27 கோடியில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த தொகுப்பு வழங்கும் திட்டம் செய்யப்படுத்தப்படும்.

19 லட்சம் ஹெக்டேரில்,  ரூ. 32.48 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நெல் சாகுபடி திட்டம் செய்யப்படுத்தப்படும். வேளாண் துறையிலும், மின்னணு வேளாண் திட்டம் ஏற்படுத்தப்படும். விதை முதல் விளைச்சல் வரை மின்னணு முறையில் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.

ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படும். இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும். 

பயிர்களில் பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த ரூ. 5 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

19 லட்சம் ஹெக்டேரில்,  ரூ. 32.48 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நெல் சாகுபடி திட்டம் செய்யப்படுத்தப்படும். வேளாண் துறையிலும், மின்னணு வேளாண் திட்டம் ஏற்படுத்தப்படும். விதை முதல் விளைச்சல் வரை மின்னணு முறையில் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.

ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படும். இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும். 

பயிர்களில் பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த ரூ. 5 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

பனை மரம் ஏறும் கருவியை கண்டுபிடிப்பவர்களுக்கு விருது வழங்கப்படும். புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு.

சிறு தானிய, எண்ணெய் வித்து மதிப்பு கூட்டு இயந்திரங்கள் மானியத்தில் வழங்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட்டுகள் அமைக்க ரூ. 1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வேளாண் பண்ணை குட்டைகள் அமைக்க ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ. 65 கோடியில் 3 ஆயிரம் விவசாயிகளுக்கு சோலார் பம்புசெட்கள் வழங்கப்படும்.  டெல்டா பகுதியில் பாசன கால்வாய்களை தூர்வார ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண் சந்தை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க ரூ. 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 38 கிராமங்களில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் மையங்கள் அமைக்க ரூ. 95 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

தென்னை, மா, கொய்யா, வாழை தோட்டங்களில் ஊடுபயிர்களை ஊக்குவிக்க ரூ. 27.51 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தேனீ வளர்ப்பு திட்டத்துக்கு ரூ. 10.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ. 175 கோடியில் புதிய நீர்வழிப்பாதை மேம்பாடு 2.0 திட்டம்  செய்யப்படுத்தப்படும்.

பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். விவசாய பணிகளில் ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு ரூ. 10 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். 

உழவர் சந்தைகளில் மாலை நேரத்திலும் சிறுதானியம், பயிறு வகைகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பயிர் காப்பீடு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ. 2,546 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசு மாணவியர் விடுதிகளில் காய்கறி, பழங்கள், மூலிகை தோட்டம் அமைக்கப்படும். 200 விடுதிகளில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் செய்யப்படுத்தப்படும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu agriculture budget 2022 full details


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->