ரூ.35 கோடிக்கு சாலைகள் போட திட்டம்.. வேலூர் மாநகராட்சியின் பட்ஜெட் நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு!
Roads to be laid at a cost of Rs 35 crore Vellore Corporation Budget 2025-26
வேலூர் மாநகராட்சியின் 2025-2026 பட்ஜெட் நிதி நிலை அறிக்கையானது இன்று தாக்கல் செய்யப்பட்டது.
வேலூர்மாவட்டம்,வேலூரில் மாநகராட்சியின் அலுவலகத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் பட்ஜெட்டானது தாக்கல் செய்யப்பட்டது . மேயர் சுஜாதா தலைமையில் பட்ஜெட்டானது தாக்கல் செய்யப்பட்டது .இதில் துணை மேயர் சுனில் மாநகராட்சி ஆணையர் ஜானகி,வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோரும் மாமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் .

இந்த கூட்டத்தில் குடிநீர் விநியோகம் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.120 லட்சம் மதிப்பீட்டில் பணி ஆணைகளை வழங்குவதும், 60 வார்டுகளில் 28600 தெரு விளக்குகள் பராமரிப்பு அம்ரூத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு ரூ.16 கோடியில் மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளுதல் ,ரூ.35 கோடிக்கு சாலைகளை புதியதாக அமைத்தல், இதில் தார் சாலைகள் சிமெண்ட் சாலைகளும் அடங்கும் ,வேலூர் நேதாஜி காய்கறி சந்தையை நவீன சந்தையாக மாற்ற ரூ.50 கோடிக்கு திட்ட அறிக்கை தயார் செய்யவும்,
சோலார் மின் ஆலை மூலம் 21. 74 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட மாநகராட்சி பயன்பாடு, பூங்காங்கள் ,மேம்பாடு நூலகங்கள் அமைத்தல் ,மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல் சாரதி மாளிகை சீரமைப்பு உள்ளிட்ட புதியதாக 73 பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவைகளுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
English Summary
Roads to be laid at a cost of Rs 35 crore Vellore Corporation Budget 2025-26