நன்றி : விவசாயிகளுக்கு விருந்து அளிக்கும் தவெக விஜய்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் 27-ம் தேதி  நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில்,  மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் விவசாயிகள் நிலம் வழங்கினர். அந்த நிலத்தை மாநாட்டிற்கு பயன்படுத்தி விட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல ஏற்பாடு செய்து தரப்படும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

சமீபத்தில், நிலம் வழங்கிய அப்பகுதி விவசாயிக்கு தவெக நிர்வாகிகள் இலவசமாக பசுமாடு மற்றும் கன்று குட்டியை வழங்கினர்.இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு  நன்றி தெரிவிக்கும் விதமாக கட்சியின் தலைவர் விஜய் விருந்து அளித்தார்.

முன்னதாக, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த மாதம் 3-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு விஜய் தனது 69-வது படத்தின் படப்பிடிப்பில் நடித்து வரும் நிலையில், பின்னர்  மீண்டும் அரசியல் பணியில் சில நாட்கள் ஈடுபட உள்ளதாக சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thank you tvk vijay who feasts the farmers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->