பாஜகவுடன் அதிமுக கூட்டணி வரலாறு பிழை, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார் திருமாவளவன்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நிலைக்கொண்டிருக்கிற சமூக நீதி அரசியலை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் உண்மையான நோக்கம் என விசிக தலைவர் திருமாவளவன் கோரியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளதாவது; திராவிடக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றை பலவீனப்படுத்தி பாஜக இங்கே காலூன்றி நிற்க வேண்டும் எனவும், பின்னால் திராவிடக் கட்சியையும் அழித்தொழிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். 

அத்துடன், திமுக, அதிமுக ஆகிய இரண்டு அரசியல் கட்சிகளை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இங்கு நிலைக்கொண்டிருக்கிற சமூக நீதி அரசியலை வலுவிழக்கச் செய்ய வேண்டும்  அது தான் பாஜகவின் உண்மையான உள்நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இவற்றை எல்லாம் அறிந்துகூட அதிமுக ஒரு வரலாற்றுப் பிழையை செய்துள்ளது என்று திருமா தெரிவித்துள்ளார். அத்துடன், 2021-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையிலும் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பது என்பது அதிமுகவிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தும் இப்படி முடிவு எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதிமுகவிற்கு ஏற்படுகிற பின்னடைவுகளை எல்லாம் தாண்டி, பாஜகவை வாக்கு வங்கி ரீதியாக வலிமைப் படுத்துவதற்கு துணைப் போகிறது என்பது வரலாற்றுப் பிழை என்றும், அதிமுக மீண்டும் சிந்தித்த மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது வரலாற்று தேவையாக இருக்கிறது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். அத்துடன், மேலும், முதலமைச்சரின் கருத்தை முழுமையாக ஏற்று ஆதரிக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The AIADMK alliance with the BJP is a historical mistake it should be reconsidered says Thirumavalavan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->