உசிலம்பட்டியில் பரபரப்பு!...முன்னாள் அதிமுக அமைச்சர் மீது தாக்குதல்!....கார் உடைந்து மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள அத்திபட்டியில் நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அவர்  திருமங்கலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆர்.பி.உதயகுமாருடன் அவரின்  ஆதரவாளர்கள் சிலரும் காரில் சென்றனர்.

தொடர்ந்து, மங்கல்ரேவு பகுதியில் ஆர்.பி உதயகுமார் ஆதரவாளர்களின் கார்களை அமமுக நிர்வாகிகள் திடீரென மறித்து, டிடிவி தினகரன் குறித்து அவதூறாக பேசியதாக ஆர்.பி.உதயகுமாரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக சொல்லப்படுகிறது.

மேலும், அமமுக நிர்வாகிகள் ஆர்.பி.உதயகுமாருடன் வந்த அவரது ஆதரவாளர்களின் கார்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.  இந்த தாக்குதல் சம்பவத்தில்  உசிலம்பட்டியை சேர்ந்த மதுரை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் தினேஷ்குமார், விஷ்ணு, அபினேஷ் உள்ளிட்ட சிலர்  காயம் அடைந்தனர்.

பின்னர் 3 பேரும் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துர்கா தேவி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The excitement in usilampatti attack on former aiadmk minister car broke down and admitted to hospital


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->