'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் குறித்து சர்ச்சை கருத்து.! கொந்தளிப்பில் பாஜகவினர்.! - Seithipunal
Seithipunal


'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் குறித்து மத்தியப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 11 ஆம் தேதி 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் 1990 ஆம் ஆண்டு காஷ்மீரில் ஏற்பட்ட கிளர்ச்சியில், காஷ்மீர் இந்துக்கள் வெளியேற்றப்பட்டதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்கரபோர்த்தி, பல்லவி ஜோஷி ஆகியோர் நடித்துள்ளனர். 

இத்திரைப்படம் குறித்து மத்தியப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கான் தனது டிவிட்டர் பக்கத்தில், "காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பிராமணர்களின் வலியைக் காட்டுகிறது. அவர்கள் காஷ்மீரில் அனைத்து மரியாதையுடன் பாதுகாப்பாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும். 

நாட்டின் பல மாநிலங்களில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதைக் காட்ட ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும். இஸ்லாமியர்கள் பூச்சிகள் அல்ல, அவர்களும் மனிதர்கள்; நாட்டின் குடிமக்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

இவரின் இந்த பதிவுக்கு மத்தியப் பிரதேச பாஜக செயலாளர் ராஜ்னேஷ் அகர்வால், நியாஸ் கான் விளம்பரத்திற்காக இத்தகைய கருத்தைத் தெரிவித்துள்ளதாக குற்றம்சாட்டி, அவர் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the Kashmir files movie issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->