பாஜகவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி! - Seithipunal
Seithipunal


ஹரியானாவில் வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கிடையே காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையேயான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நிதித்து வந்த நிலையில், சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், அரியானா மாநில சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த திங்கட்கிழமை ஆம் ஆத்மி வெளியிட்டது.  

 

இதற்கிடையே ஆம் ஆத்மி தனது இரண்டாவது கட்ட பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில் ஹென்ரி, சதௌரா,அதம்பூர், தானேசர், ரதியா, டைகான், பரிதாபாத் பர்வாலா மற்றும் பவால் ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது

 

இந்நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அரியானா பாஜக மாநில துணைத்தலைவர் சந்தோஷ் யாதவ் நேற்று கட்சியில் இருந்து விலகியுள்ளார். அட்லி தொகுதியில் சந்தோஷ் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்த்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாஜக மாநில துணைத்தலைவர் பதவியை சந்தோஷ் யாதவ் ராஜினாமா செய்துள்ளார்.

 

ஹரியானா மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் சுஷில் குப்தா நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களில் முழு பலத்துடன் போட்டியிடும் என்றும், ஊழல் நிறைந்த பாஜக அரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பதே எங்களின் ஒரே குறிக்கோள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The main point of departure from BJP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->