மும்மொழி கொள்கை நிர்பந்தப்படுத்துவது சரியல்ல; தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான், மாற்றம் கிடையாது; எடப்பாடி பழனிசாமி .! - Seithipunal
Seithipunal


வேலூர் கோட்டை மைதானத்தில் 'இலக்கு 2026' என்ற தலைப்பில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- மத்திய அரசாங்கம் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறுவது சரியல்ல.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழி கொள்கைதான். இதில் மாற்றம் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர் 'தேசிய கல்விக் கொள்கையை கடைப்பிடித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சொல்வது சரியல்ல. மும்மொழிக் கொள்கையை ஏற்க நிர்பந்தப்படுத்துவது சரியல்ல. தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களைப் பார்க்காதீர்கள்; மக்களைப் பார்த்து நிதி ஒதுக்குங்கள் என்று பேசியுள்ளார். 

மேலும், 'அ.தி.மு.க. யாரை நம்பியும் இருந்தது கிடையாது, மக்களை நம்பி இருக்கிறது. நாங்கள் யாரை ஒட்டியும் அரசியல் செய்வது கிடையாது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய, வலிமையான வெற்றி கூட்டணி அமையும். கூட்டணி வேறு, கொள்கை வேறு. 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி வாகை சூடும்' என்று உறுதிபட கூறியுள்ளார்.

அத்துடன் அங்கு அவர் மேலும் உரையாறுகையில்; 'சென்னை கோட்டைக்கு செல்வதற்காகவே வேலூர் கோட்டையில் திரண்டுள்ளோம். கோட்டையில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்பும் கூட்டம்தான் இந்த மாநாடு. ஒரு கட்சி வலுவாக இருக்க இளைஞர்கள் அதிகமாக இருக்க வேண்டும். இளைஞர்களை அதிகம் கொண்டிருக்கும் கட்சி அ.தி.மு.க. என்று பேசியுள்ளார்.

அத்தோடு 'அ.தி.மு.க. யாரை நம்பியும் இல்லை. மக்களை நம்பியே உள்ளது. தி.மு.க.வுக்கு கொள்கையும் கிடையாது, கூட்டணியும் கிடையாது. அடிக்கடி நிறம் மாறும் கட்சி தி.மு.க. அ.தி.மு.க.வைப் பற்றி பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை. தமிழகத்தில் 2025 ஜனவரி முதல் பிப்ரவரி 14 வரை சுமார் 107 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து. 'குழந்தைகள் தன்னை 'அப்பா அப்பா' என பாசத்தோடு அழைப்பதாக முதலமைச்சர் கூறி வருகிறார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் 'அப்பா' என கதறுவது முதலமைச்சருக்கு கேட்கவில்லையா..? என்று குறித்த மாநாட்டில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There is no change in the two language policy in Tamil Nadu Edappadi Palaniswami


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->