காட்டம்!!! பூச்சாண்டி காட்டுவதிலும்.... நாடகம் ஆடுவாதிலும் பயனில்லை....! - வானதி சீனிவாசன்
There no point showing off or acting out drama Vanathi Srinivasan
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இந்தி திணிப்பைப் பற்றிய விளக்கத்தைத் தெரிவித்தார். செய்தியாளர்களின் கேள்வி பேட்டியில் அவர் கூறியதாவது, " பிரதமர் நரேந்திர மோடி அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். புதிய கல்விக் கொள்கை மூலம் நம் நாட்டில் உள்ள மாணவர்கள் அனைவரும் ஒரே கருத்தோடு கல்வி பயில வேண்டும் என்ற எண்ணத்தை அவர் கொண்டுள்ளார். ஏற்கனவே தனியார் பள்ளிகளில் வசதி வாய்ந்த பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்குப் பல்வேறு மொழிகளைக் கற்றுக் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்தி கட்டாயம் அல்ல:
ஆனால் அரசுப் பள்ளி மாணவர்கள் தற்போது வரை இரண்டு மொழி மட்டுமே கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். இது ஒன்றும் கட்டாயம் அல்ல. திமுக பொதுமக்களை திசைத் திருப்புகிறது. இந்தி நிச்சயமாகக் கட்டாயம் அல்ல. இங்கு இந்தி திணிக்கப்படுகிறது என்ற பிம்பத்தை, திமுக கட்சியினர் மற்றும் முதலமைச்சர் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இது முற்றிலும் பொய்யானவை. தனியார் பள்ளி மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்று வருகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கிற வாய்ப்பு அரசுப் பள்ளி ஏழை மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது மட்டும்தான் பாஜகவின் நிலைப்பாடு.
திமுக கட்சி:
தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் என்ற ஒரு நாடகம் நடத்துகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "எந்த ஒரு வரையறையும் இல்லை. தென்னிந்தியா முழுவதும் மாநில எம்.பிகளின் எண்ணிக்கைக் குறையாது' என்று உறுதியளித்துள்ளார். இதன் பிறகும் கூட முதலமைச்சர் எந்த ஆதாரமும் இல்லாமல் பூச்சாண்டி கட்ட முயற்சி செய்கிறார். நீங்கள் என்னதான் கூக்குரலிட்டாலும் உண்மை ஒருபோதும் மறையாது.பாஜக அத்தனை விஷயங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் " என பாஜக கட்சியின் எண்ணம் குறித்து தெரிவித்தார்.
English Summary
There no point showing off or acting out drama Vanathi Srinivasan