"சிறுமியை கர்ப்பமாக்குவேன்.. புள்ள திருமா போல பொறக்கனும்" என்ற சரவெடி சரணை கைகுலுக்கி பாராட்டும் திருமாவளவன் எம்.பி.! - Seithipunal
Seithipunal


தற்போது சமூக நீதி பேசுவதாக கூறி பலரும் தலித்தியத்தை தான் தூக்கி பிடிக்கின்றனர். சமூகநீதி என்பது சாதியத்திற்கு அப்பாற்ப்பட்டது. ஒடுக்கப்பட்டவர்கள் என்ற போர்வையில் தலித்திய கும்பல் நடத்தும் அத்துமீறல்களை கூட எதிர்க்க முடியாதவர்கள் என்ன சமூகநீதியை நிலைநாட்டி விட முடியும்? புரட்சி செய்வதாக இங்கே தலித்தியத்தை வளர்த்தெடுக்கிறார்களே ஒழிய சமூகநீதி கேளிக்குறி தான். 

'மார்கழியில் மக்களிசை' என்ற பெயரில் சமத்துவத்தை நிலைநாட்டும் விதமாகவும், சாதிய அத்துமீறல்களை மற்றும் மதம் என்ற பெயரில் நடக்கும் ஏற்றத்தாழ்வு வன்முறைகளையும் வெளிப்படுத்தும் விதமாக இசைவாணி போன்ற பல்வேறு புரட்சியாளர்கள் பாடல் பாடி வருகின்றனர். இது சமூக மாற்றத்திற்கானது என்று அவர்கள் அடையாளப் படுத்துகின்றனர். 

இசை வாணியின் "ஐ அம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தா தப்பாப்பா?" என்று சபரிமலையில் பெண்கள் நுழைவது குறித்து ஒரு பாடலை பாடியிருப்பார். மதங்கள் பெரியளவில் பெண்களை சிறுமை படுத்துகிறது என்பதை விளக்கும் விதமாக அந்த பாடல் இருக்கும். 

ஆணாதிக்கத் தனமான மூடநம்பிக்கைகளை எதிர்த்து பாடல் பாடும் அதே "மார்கழி மக்களிசை" மதுரை மேடையில் ஒரு மோசமான சம்பவத்தை ஆணாதிக்கவாதியான கானா பாடகர் சரவெடி சரண் அரங்கேற்றியுள்ளார். அந்த மேடையில்தான் இசைவாணி போன்ற புரட்சியாளர்களும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

"பால்வாடி படிக்கும் பொழுது குச்சி மிட்டாய் கொடுத்து, எட்டாம் வகுப்பு பாஸ் ஆனதும் வாந்தி எடுக்க வைத்தால் தான் என்ன விட்டு அந்த பெண் போக மாட்டா" என்று அந்த சரவெடி சரண் கானா பாடல் பாடுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து மிகுந்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அத்துடன் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.வருண் குமார் அவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

இத்தகைய நிலையில், சரவெடிசரண் சிதம்பரம் தொகுதி எம்.பி திருமாவளவன் முன்னிலையில் ஒரு கானா பாடலை பாடும் பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பாடலில் அம்பேத்கர் குறித்து புகழ்ந்தும், பின்னர் 'புள்ளைன்னு பொறந்தா திருமா அண்ணா போல இருக்கணும்" என்று கூறி முடிக்கிறார் இந்த பாடலை கேட்டதும் திருமாவளவன் மகிழ்ந்து அவரை கைகுலுக்கி பாராட்டுகிறார். 

பெண்களுக்கான சம உரிமையை நிலைநாட்டும் பெண்ணிய போராளியாக திருமாவளவன் தன்னை முன்னிறுத்தும் நிலையில், தன்னுடன் இருந்த சரவெடி சரண் என்ற இளைஞர் தற்போது இப்படி ஒரு மோசமான காரியத்தை செய்து இருப்பது குறித்து திருமாவளவன் இன்னமும் எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. மேலும், பெண்ணியவாதிகளாக அடையாளப்படுத்திக்கொள்ளும் தோழர் சுந்தரவள்ளி, ஷாலினி மற்றும் கனிமொழி எம்.பி போன்றவர்களும் இது குறித்து எந்தவிதமான எதிர்ப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumalavan Wishes to saravedi saran


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->