விஜய்யின் செயல்பாடு நம்பிக்கை தருகிறது.. திருமாவளவன் கருத்து..!!
Thirumavalavan opined that Vijay performance gives hope
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருது வழங்கினார். அப்போது பேசிய அவர் "ஒரு பொறுப்புணர்வு வந்தது போல் உணர்கிறேன். நான் சுமாராக பணிக்கும் மாணவன் தான்.
உங்கள் அளவிற்கு எனக்கு படிப்பு வராது. என்னுடைய கனவு பயணம் எல்லாமே சினிமா தான். வாழ்க்கையில் இலவசமாக கிடைப்பது அட்வைஸ் தான். ஆனால் அது உங்களுக்கு பிடிக்காது என்பது எனக்கு தெரியும். கல்வியை விட வாழ்க்கையில் முக்கியமானது உங்களின் கேரக்டரும் சிந்திக்கும் திறனும் தான்.
வாழ்க்கையில் ஜாலியாக இருந்த ஆனால் உங்கள் சுய அடையாளத்தை இழந்து விடாதீர்கள். சமூக வலைதளத்தில் வரும் அனைத்து தகவல்களையும் உண்மை என்று நம்ப வேண்டாம். எல்லா தகவல்களையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக அம்பேத்கர், பெரியார், காமராஜ் ஆகியோரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடாதீங்க. மாணவர்கள் நாளைய வாக்காளர்கள். அடுத்து நீங்கள்தான் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க போகிறீர்கள். நம் விரலை வைத்து நாமே கண்ணை குத்துவது தான் இப்போது நிகழ்ந்து வருகிறது. காசு வாங்கி ஓட்டு போடாதீங்க என்று உங்கள் பெற்றோர்களிடம் நீங்கள் தான் சொல்ல வேண்டும். நீங்கள் சொன்னால் கண்டிப்பாக கேட்பார்கள்" என விழா மேடையில் பேசியிருந்தார்.
நடிகர் விஜயின் இத்தகைய பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் "நடிகர் விஜயின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையை தருகிறது. விஜயின் செயல்பாடு மாணவர்களுக்கு பெரும் ஊக்கத்தை தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அம்பேத்கர் உள்ளிட்ட சமூக நீதி தலைவர்களை படியுங்கள் என விஜய் வழிகாட்டி இருப்பதற்கு பாராட்டுக்கள்" என கருத்து தெரிவித்துள்ளார்.
English Summary
Thirumavalavan opined that Vijay performance gives hope