காலை உணவுத் திட்டம் எளியோரின் அடிவயிற்றில் பால்வார்க்கும் திட்டம் - விசிக திருமாவளவன்.!
Thirumavalavan speech about morning breakfast in Govt school
அரசுப் பள்ளியில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
தமிழகத்தில் இருக்கும் 38 மாவட்டங்களில் இந்த காலை உணவு திட்டத்தை துவங்க முதல் கட்டமாக ரூ.33.56 கோடிகள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்டாலின், அரசு பள்ளிக்கு சென்று குழந்தைகளுடன் உணவு உண்டு, அவர்களுக்கு உணவு பரிமாறி இந்த திட்டத்தை துவங்கி வைத்தார்.
இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'காலை உணவுத் திட்டம் எளியோரின் அடிவயிற்றில் பால்வார்க்கும் திட்டம். இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்மாதிரித் திட்டம். பசியாறினால் பலவும் பயனுளதாய் அமையும். பொறுமையும் மகிழ்வும் பூவிதழ்களாய் மலரும். பசிப்பிணி மருத்துவராய் பரிணாமம் பெற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எமது பாராட்டுக்கள்.' என பதிவிட்டுள்ளார்.
English Summary
Thirumavalavan speech about morning breakfast in Govt school