#TnBudget2023 : ஆதிதிராவிடர்&கள்ளர் பள்ளிகள் : அரசின் நடவடிக்கை பற்றி திருமாவளவன் எம்.பி ட்வீட்.! - Seithipunal
Seithipunal


இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கலுக்காக சட்டப்பேரவை கூடியது. அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பின், பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்து வந்தார்.

அந்த அறிவிப்புகள் வரிசையில், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், அறநிலையத்துறை, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் வனத்துறை பள்ளிகள் என்று அனைத்தையும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த திட்டங்களை நடைமுறை படுத்த பல ஆண்டுகளாக அரசு தயங்கி வந்த நிலையில் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது துணிச்சலானதாக பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் இது பற்றி ட்வீட் செய்துள்ள திருமாவளவன் எம்.பி முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர், "அனைத்துச் சமூகப் பள்ளிகளையும் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் கொண்டுவர தமிழ்நாடுஅரசு எடுத்துள்ள துணிச்சலான முடிவை வரவேற்கிறேன். பள்ளிகளின் பெயர்களில் இருந்த சாதி அடையாளங்களை நீக்கிட முன் வந்துள்ள மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின்  அவர்களுக்கு எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirumavalavan thanks to community schools under education department announcement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->