கார் லாரி நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து.. திமுக பிரமுகர் உடல் நசுங்கி பலி.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் குபேந்திரன் (வயது 45). இவர், திருவள்ளூர் பகுதியில் தியேட்டர் மற்றும்  ஹோட்டல் உள்ளிட்டவற்றை நிர்வகித்து வருகிறார். திமுக பிரமுகரான இவருக்கு ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே சொந்தமான நிலம் உள்ளது.

இந்த நிலையில் நேற்று, புத்தூரில் உள்ள தனது விவசாய நிலங்களை பார்வையிட குபேந்திரன் காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவள்ளூரில் உள்ள வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி அடுத்த தரணிவராகபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி குபேந்திரனின் கார் மீது மோதியது. இந்த கொடூர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. 

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த குபேந்திரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருத்தணி போலீஸார்  குபேந்திரனின் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur DMK leader kubenthiran death in accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->