பாஜக அநியாயமாக பறித்த கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான ஆணை இது!...ஜம்மு-காஷ்மீரில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
This is an order to restore the dignity unjustly taken away by the bjp chief minister mk stalin congratulates the congress alliance that won in jammu and kashmir
ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணி 49 தொகுதிகளை கைப்பற்றி ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியை பிடித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்பார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தலில் வெற்றிபெற்ற தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், அமோக வெற்றி பெற்ற தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணிக்கும், ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது இந்தியாவிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றியை விட அதிகம் என்று குறிப்பிட்டுள்ள அவர், மத்திய பாஜக அரசு அநியாயமாக பறித்த ஜம்மு காஷ்மீரின் கண்ணியம் மற்றும் மாநிலத்தை மீட்டெடுப்பதற்கான அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான ஆணை இது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த தருணம் ஒவ்வொரு காஷ்மீரியின் நம்பிக்கையையும் மதிக்கும் நியாயமான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாக தெரிவித்துள்ளார்.
English Summary
This is an order to restore the dignity unjustly taken away by the bjp chief minister mk stalin congratulates the congress alliance that won in jammu and kashmir